என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 29 ஜூன், 2023

பாடல் (71) பணி ஓய்வு பெறும் கிருபானந்தனுக்கு வாழ்த்துப் பா !

 

 

             பணி ஓய்வு வாழ்த்துப்பா !

--------------------------------------------------------------------

உதவுகின்ற   உள்ளமென்றும்   உலகையாளும்   திண்ணம் !

…..உலகையாளும்  மனிதர்களின் உணர்வுகள்தேன் கிண்ணம் !

கதவுகளை   மூடிவைத்துக்   கரந்துறையும்   எண்ணம்,

…..கடுகளவும்    மனதில்இலாக்   காவலரே   வாழ்க !

 

ஓய்வுபெறும்   அருள்நிதியே  !   ஒண்ணிழலே  !   நன்றி  !

…..உமதருளால் “டை-கோல்டில்”   உவந்தடைந்தேன்    வென்றி !

காய்வுணர்வு   சற்றுமிலாக்   கண்ணியர்நீர்   அன்றி,

…..காண்பதற்கு   வாரியத்தில்   காழ்மணிகள்   இல்லை  !

 

தீங்குதனைப்  பிறர்க்கெண்ணாத்   தேவமணி   வாழ்க !

…..திண்ணியர்நும்   வாழ்வினிலே   தெள்ளினிமை   சூழ்க  !

ஓங்குபுகழ்   வந்தடைக !    ஊழ்குதுன்பம்   வீழ்க !

…..ஊருணியே  !  பொன்னிலவே  !  நலமடைக !   நாளும் !

 

வாரியத்தின்     பணிகளுக்கு    இன்றுமுதல்    ஓய்வு  !  

…..வாரணமே    நின்மனையில்    இனிபெறுக   தோய்வு  !

சீரியரே !   எமக்குதவும்     செயற்பொறிஞ !    வாழ்க !

…..செப்புகிறேன்    நனிநன்றி !   சீர் வாழ்க !    வாழ்க !!   

---------------------------------------

நன்றியுடன்,

கவிக்குயில் சிவக்குமார்

உதவிப் பொறியாளர்.

30-06-2023

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2054, ஆடவை (ஆனி) 15)

(30-06-2023)
-------------------------------------------------------------------------------------


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக