----------------------------------------------------------------------------------------
"வானில் முழு மதியைக் கண்டேன்"
என்னும் திரைப்படப் பாடலைத் தழுவி,
அதே மெட்டில்
எழுதப்பட்ட கவிதை !
(ஆண்டு 1970)
---------------------------------------------------------------------------------------
கனவில் வந்த கனிமுகம் --- அந்தக்
…….கலைமகள்
எனது திருமுகம் !
மனதில்
மலர்ந்த மதிமுகம் --
இன்று
…….மறைந்த
தேனிந்த மறைமுகம் !
வேனில்
நிலவினை விழிகளில் கண்டேன் !
…….வேய்ங்குழல் இன்னிசை
குரலில் கண்டேன் !
மானின்
மருளவள் மனதினில் கண்டேன் !
…….மயக்கம்
தந்தெனை மறந்தவள் சென்றாள் !
தேனின்
சுவையவள் இதழ்களில் கண்டேன் !
…….தென்னம் பாளையைச் சிரிப்பினில் கண்டேன் !
வானின் வில்லொளி வடிவினில்
கண்டேன் !
…….வருத்தம்
தந்தெனை மறந்தவள் சென்றாள் !
கனிந்த
சுளைநிகர் கன்னங்கள் கண்டேன் !
…….கடல்விளை
சங்கம் கழுத்தினில் கண்டேன் !
குனிந்த
நடையினில் குருகினைக் கண்டேன் !
…….கொடுந்துயர் தந்தெனை
மறந்தவள் சென்றாள் !
பனித்துளி
நீரெனத் தவிப்புடன் நின்றேன் !
…….பாசம்
மிகுந்தெனை அணைத்திட வந்தாள் !
கனிச்சுவை
உண்டவள் கரங்களைத் தொட்டேன் !
…….கண்மணி விலகிட; கனவென நின்றாள் !
---------------------------------------------------------------------------------------