என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 10 ஜூன், 2022

பாடல் (45) (1972) அமுதத் தமிழின் புதுமைச் சுடரே ! (கற்பனையில் பாசமலர் காட்சி)

-----------------------------------------------------------------------------------

பாசமலர்   அண்ணன்,    தனது  தங்கையின்

பிரிவை  எண்ணிப்  கற்பனையாகப் 

பாடும்

ஒரு

சோகக்  கவிதை !

(ஆண்டு  1972)

 

------------------------------------------------------------------------------------

 

 

அமுதத்  தமிழின்  புதுமைச்  சுடரே 

…..எங்கே  போகிறாய் ?

……….அமைதி  குலைய  இதயம்  நெகிழ 

……………எங்கே  போகிறாய் ?

 

குமுத  மலரின்  அழகு  இதழே 

…..எங்கே  போகிறாய் ?

……….குவளை  விழியில்  துயிலும்  நிலவே 

……………எங்கே  போகிறாய் ?

 

இதய  வானில்  சுழலும்  கதிரே 

…..எங்கே  போகிறாய் ?

……….உதய  நிலவின்  புதிய  ஒளியே 

……………எங்கே  போகிறாய் ?

 

உள்ளம்  நிறைந்த  அண்ணன்  துறந்து 

…..எங்கே  போகிறாய் ?

……….அன்பே எங்கே போகிறாய் ?

 


இளமை   நினைவில்   மலரும்   கனவே  

…..எங்கே  போகிறாய் ?

……….எண்ணம்  கலைய  உள்ளம்  சிதற 

……………எங்கே  போகிறாய் ?

 

குளிரும்  பனியின்   மிளிரும்   எழிலே  

…..எங்கே   போகிறாய் ?

……….கோடி  விழியில்  ஆடும்  கலையே 

……………எங்கே  போகிறாய் ?

 

கழனி    விளையும்   பவளக்   கதிரே  

…..எங்கே   போகிறாய் ?

……….கண்மணி  தங்கை  உறவைப்  பிரிந்து 

……………எங்கே  போகிறாய் ?

 

பழகும்   தமிழே!   அண்ணன்   மறந்து   

…..எங்கே   போகிறாய் ?

……….பாசம்  நிறைந்த  உயிரைத்  துறந்து 

……………நானும்  போகிறேன் !

 

உறவின் பிரிவால் சாகிறேன் !

 

-------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 27)

{10-06-2022}

 

----------------------------------------------------------------------------------