-----------------------------------------------------------------------------------
பாசமலர் அண்ணன், தனது
தங்கையின்
பிரிவை எண்ணிப் கற்பனையாகப்
பாடும்
ஒரு
சோகக் கவிதை !
(ஆண்டு 1972)
------------------------------------------------------------------------------------
அமுதத் தமிழின் புதுமைச் சுடரே
…..எங்கே போகிறாய் ?
……….அமைதி குலைய இதயம் நெகிழ
……………எங்கே போகிறாய் ?
குமுத மலரின் அழகு இதழே
…..எங்கே போகிறாய் ?
……….குவளை விழியில் துயிலும் நிலவே
……………எங்கே போகிறாய் ?
இதய வானில் சுழலும் கதிரே
…..எங்கே போகிறாய் ?
……….உதய நிலவின் புதிய ஒளியே
……………எங்கே போகிறாய் ?
உள்ளம் நிறைந்த அண்ணன் துறந்து
…..எங்கே போகிறாய் ?
……….அன்பே எங்கே போகிறாய் ?
இளமை நினைவில் மலரும் கனவே
…..எங்கே போகிறாய் ?
……….எண்ணம் கலைய உள்ளம் சிதற
……………எங்கே போகிறாய் ?
குளிரும் பனியின் மிளிரும் எழிலே
…..எங்கே போகிறாய் ?
……….கோடி விழியில் ஆடும் கலையே
……………எங்கே போகிறாய் ?
கழனி விளையும் பவளக் கதிரே
…..எங்கே போகிறாய் ?
……….கண்மணி தங்கை உறவைப் பிரிந்து
……………எங்கே போகிறாய் ?
பழகும் தமிழே! அண்ணன் மறந்து
…..எங்கே போகிறாய் ?
……….பாசம் நிறைந்த உயிரைத் துறந்து
……………நானும் போகிறேன் !
உறவின் பிரிவால் சாகிறேன் !
-------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
”தமிழ்ச் சிப்பி”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
27)
{10-06-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக