எழுகவே ! எழுகவே ! எழுகவே ! - வீறுகொண்டு
……….எழுகவே ! எழுகவே ! எழுகவே !
விழுவதற்கு
இடந்தராது எழுகவே ! – தமிழினமே
……….வெற்றிகொளப் புறப்படுநீ எழுகவே !
அழுவதற்கும் தொழுவதற்கும் நேரமில்லை எழுகவே !
……….அஞ்சியஞ்சி சோர்ந்திடாது எழுகவே !
பழுதுஇல்லை
நமதிலக்கில் எழுகவே ! – நமது
………படைமுரசு ஆர்ப்பரிக்க எழுகவே !
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ
[திருவள்ளுவராண்டு: 2054, விடை (வைகாசி)01]
{15-05-2023}
---------------------------------------------------------------------------------------------
%20%20%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88(2012)%20%20%20(17-1-2012).jpg)