”இல்” என்றால் ”இல்லை”யென்று பொருளுரைக்கும்
மனிதா !
………“இல்” என்னும்
சொற் பொருட்கு வரம்பு ஏதும் உளதா ?
“இல்” என்றால் “இடம்” என்று பொருளுண்டு
காணீர் !
………”இல்”
என்றால் “வீடென்றும் உரைத்திடுவர் கேளீர் !
“இல்” என்றால் “மனை வாழ்க்கை” எனப் புகல்வதுண்டு
!
………”இல்”
என்றால் சோதிடத்தில் இராசியைச் சொல்வ துண்டு !
“இல்” என்றால் எதிர்மறை இடைநிலையாம் என்பர் !
………”இல்”
என்றால் விகுதி உருபு என்பார் சில அன்பர் !
“இல்” என்றால் “தலைவி” என்றும் சொல்வான்
நம் மாந்தன் !
……….”இல்”
என்றால் “பெண்” என்றே நிறுவிட
நான் வந்தேன் !
……….”இலையென்றால்
நம்வாழ்வில் வளமில்லை ! தொல்லை !
“இல்”என்றால் அன்னை ! அவள் அன்பிற்கு ஏதெல்லை ?
………இல்லத்தில்
தாயிலையேல் அஃதுதொரு பாழ்ங்கொல்லை ?
………..”இல்லத்தில்
ஒளி பெருக்கும் எழில்விளக்காம் மனைவி ?
“இல்” என்றால் “இல்வாழ்வில் எழில் சேர்க்கும் பெண்ணாள்
!
…………இல்லத்தில்
மனைவியிலை என்றால் அது வாழ்வா ?
“இல்” என்னும் இல்லாளின் பெருமைக் கேதெல்லை ?
………..”இல்”
என்றால் பெண்ணெண்று இயம்புவதும் தவறோ ?
……….”இல்”
என்னும் சொற்பொருளில் இளங்கிளையும் உண்டு !
“இல்” என்னும் ஈரெழுத்துள் ”அண்ணி”யரும்
உண்டு !
……….“இல்”என்னும் வடிவுக்குள் “பாட்டி”களும்
உண்டு !
“இல்” என்னும் சொல்லுக்குள் “ஆசிரியை” உண்டு !
………….”இல்”
என்றால் பெண் என்று உரைப்பதுவும் தவறோ ?
”இல்” என்னும் சொல்லுக்குப் பொருளுரைக்க வல்லீர் !
………….”இல்”என்னும் சொல்லுக்குள் எந்தப் பெண் இல்லை ?
“இல்” என்று சொன்னாலே “பெண்” என்று பொருளாம்
!
………..”இல்”
என்னும் சொல்லுக்கு உயிர் வடிவம் பெண்ணே !
………”இல்”
என்னும் சொல்லுக்குள் வாழ்பவளே பெண்ணே !
“இல்” என்னும் உடலுக்கு உயிர்தருதல் பெண்ணே !
……….”இல்”
என்னும் சொல்லுக்குப் பொருள்தருதல் பெண்ணே !
”இல்” என்னும் குடிலுக்கு முகவரியே பெண்ணே !
……….”இல்”
என்னும் கலைக்கோயில் ஆசிரியை பெண்ணே !
“இல்” என்னும் கோயிலுக்குள் இறைவடிவம் பெண்ணே !
……….”இல்”
என்னும் மனைவாழ்வின் நாயகியே பெண்ணே !
“இல்” என்னும் அருட்சுனையின் சுவை நீரே பெண்ணே !
………”இல்”
என்னும் அன்புலகின் உயிர்மூச்சே பெண்ணே !
……”இல்”
என்னும் பெண்மையில்தான் எவ்வுயிரும் தொடங்கும் !
“இல்” என்னும் உயிர்க்கூட்டால் இவ்வுலகம்
வாழும் !
………”இல்”
என்னும் பெண்ணிலையேல்,உலகுருண்டை அழியும்
!
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக