==================================================
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புக்
கிளர்ச்சி நடந்தபோது
இயற்றிய கவிதை !
(ஆண்டு 1965)
==================================================
மொழி காக்கும் போருக்கு
வழிகாட்டும் ஒளிக்கீற்று !
==================================================
பூந்தமிழ்ச் சிறப்பைக் கண்டு
பொலிவினை அடையா இந்தி,
காஞ்சிரம் நிகர்த்த கங்கைக்
கயவர்கள் எல்லாம் இன்று
செஞ்சரம் கையில் ஏந்தி,
செந்தமிழ் நாட்டை நோக்கி,
வஞ்சக எண்ணத் தோடு,
வருவதைக் காணாய் தோழா !
தீரமே மனதிற் கொண்டு
திடமுடன் எதிர்க்க வாராய் !
தூரமே விரட்டிச் செல்வோம்’
துணிவுடன் வாராய் தோழா !
வீரமே விலைபோ காது !
வெற்றியும் நமைப்பிரி யாது !
ஆரமே அளிப்போம் தாயாம்,
அருந்தமிழ் காப்போம் வாராய் !
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக