==============================================
பொன்னி ஆற்றங்கரையில் (பாபநாசம்) பூத்த ஒரு
வாழ்த்து மலர் !
(1964 – ஆம் ஆண்டு எழுதிய பொங்கல் வாழ்த்துக்
கவிதை)
==================================================
கன்னற் கதலியும்
கவின்சுளை மாங்கனியும்,
செந்நெல் அரிசியும்
செங்கரும்பு முந்திரியும்
பாலும் நறுந்தேனும்
பசுநெய்யும் தீம்பருப்பும்,
மேலும் இனிப்பூட்ட
மேவுசுவைக் கற்கண்டும்,
குங்குமப்பூ ஏலமுடன்
தேங்காயின் பூந்துருவல்,
பைந்தமிழர் பண்பாட்டுப்
பானையிட்டு அடுப்பேற்றி
பொன்னிச் சுவைநீரைப்
பெய்துவோர் அகப்பைதனை,
கன்னித் தமிழ்க்குழவிக்
கைபிடித்துக் காய்ச்சுகையில்,
பாற்பொங்கல் பொங்கிவரும்,
பார்ப்பவர்கள் நெஞ்சமெலாம்
நற்களிப்பு ஊறிவரும்,
நாவினிக்கும், நம்மக்கள்
கண்விழிகள் நீர்சொரியும்!
களிபெருகும் ! மனமுருகும்!
விண்ணதிரப் பொங்கலோ
பொங்கலெனக் கூநேரம்
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்துவோம்! வாழியநீர் !
நல்லிதயம் கொண்டோரே!
நலமுடனே வாழியவே!
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 18]
{01-04-2022}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக