-------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்பு பயிற்சித் துறை
இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில்
உதவியாளராகப்
பணியாற்றிய திரு. கணபதி அவர்கள்
புதுக்கோட்டை வந்திருந்த போது அவருக்கு
எழுதி அளித்த கவிதை !
(1968 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)
-------------------------------------------------------------------------------------
முகவை தந்த முத்து - எங்கள்
.....முத்தமிழின் சொத்து !
..........முற்றியுடல் வற்றியுயிர்
...............பற்றியநல் வித்து !
அகவை
யஞ்சு ஆறு – உள்ளம்
.....அருங்கனியின் சாறு !
..........அன்புமனம் கொண்டுசினம்
...............நன்றகழும் ஏறு !
கடமை யொழுகுங் காளை – பைங்
.....கமுகுதமிழ்ப் பாளை !
..........கள்ளமிலா வெள்ளைமனம்
...............துள்ளியெழும் வாளை !
மடமை
சாடும் மன்னன் ! – பெயர்
.....மயில்முருகன் அண்ணன் !
..........மனமகிழ்ந்து தினமுயர்ந்து
...............இனிதுவாழ்க கன்னன் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 12]
{25-04-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக