என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

பாடல் (35) (1970) சிவந்த கன்னமும் செம்மாதுளை வாயும் !

--------------------------------------------------------------------------------------

கடல் புறா என்னும் தொடர்கதைக்காக

லதாவரைந்த படத்தை வைத்துக்கொண்டு எழுதிய

ஒரு கவிதை !

(ஆண்டு. 1970)

--------------------------------------------------------------------------------------

 

      

சிவந்த      கன்னமும்   செம்மா     துளைவாயும்

…..சேல்போன்ற     நீளவிழியும்,

குவிந்த     புருவமும்    கோலக்     கருங்குழலும்

…..குங்குமப்பூ       தோய்ந்த   உடலும்

அமுதம்    மொழிகின்ற   செந்நாவும்    மெலிந்துமிக  

…..அழகூட்டும்      மின்னலிடையும்

குமுதம்    எனையின்றுக்  கொல்லாமல்  கொல்கிறதே,

…..குயிலேநீ         ஓடிவருவாய் !

அன்பைப்         பரிமாறி        அழகுச்     சோலைதனில்,  

…..ஆலோலம்       பாடிமகிழ்வோம் !

இன்ப  மழைத்துளியாய்   இனிது   வாழ்ந்திடுவோம் !     

….. எந்நாளும்   இணைந்துவாழ்வோம் !

 

 

----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

 ----------------------------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக