=================================================
புதுக்கோடையில் பூத்த பொங்கல் மலர் !
(ஆண்டு 1970)
பொங்கல் வாழ்த்து !
[ இது ஒரு ஊரகத்துக் காட்சி ]
=================================================
பொழுதெழில் புலர்ந்துவரும் !
…..புள்ளினங்கள் ஆர்த்துஎழும் !
……….பொற்கதிர்கள் மேலெழுந்துப்
……………பூவுலகை ஊடுறுவும் !
தாழைமடல் தூளிவிழும்
!
…..தண்ணிலவும் நாணியெழும்: !
……….தரணியெலாம்
வான்பனியைத்
……………தழுவியுடல் மீமகிழும் !
கருங்குருவிக்
கூச்சலிடும் !
…..கட்டவிழும் மொட்டிதழும் !
……….காரிகையர் கற்பனையில்
……………கைவளரும்
கோலம்மிகும் !
வரப்புகளில்
பரங்கிமலர்
…..வான்பார்த்துப் நகைமுகிழும் !
……….வண்டுகளின் ஊங்காரம்
……………வாழ்த்தோதும் கதிரசையும் !
கன்றுகளை நினைந்துருகும்,
…..கறவைகள்
பால்சொரியும் !
……….கட்டவிழ்த்து
விடப்பட்டக்
……………காளையெக்கர்
மீதுலவும் !!
சென்றுவருக வருகவெனச்
…..செங்காந்தள்
கையசைப்பாள் !
……….சிரந்தாழ்த்தி
மார்கழியாள்
……………சென்றிடுவாள், தைவருவாள் !
ஏடணையாய் நெல்சொரிந்து
…..இவ்வுலகைக்
காத்திடுவாள் !
……….ஏரோட்டும்
கைப்பிடித்துப்
……………பாராட்டிச்
சீர்தருவாள் !
நன்மைகளைத் ”தை”தருவாள் !
…..நாமவளைப்
போற்றிடுவோம் !
……….நாவினிக்கப்
பொங்கலிட்டு
……………நன்றிசொலி; வாழ்த்திடுவோம் !!
==================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedrethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 11].
{25-05-2022}
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக