=================================================
அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஒட்டக்கோயிலைச்
சேர்ந்த
கல்லூரி நண்பர் தியாகராஜனின் நெட்டெழுத்து ஏட்டில்
(AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த
ஒரு கவிதை
(1963 – ஆம் ஆண்டு
எழுதிய கவிதை))
==================================================
காவிய மலருட் புகுந்தினிமைக்
…….கருத்துக் குவியல் தேனெடுத்து,
மேவிய நும்முளத் தேனீக்கள்
…….மெழுகுக் குடிலாம் நுமதுடலில் ,
கோவிய லன்னக் காத்துவரின்
…….குழுமிய பயன்தான் என்னென்கொல் !
ஓவிய உருவோய் ! என்னண்ப !
…….உதவுக தேனை உலகிற்கே !
=================================================
ஆக்கம் + இடுகை,
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக