என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 30 மார்ச், 2022

பாடல் (04) (1963) புரட்சிக் கவியே பொன்மணியே !

=================================================

கவியரங்கத்தில் பங்கேற்கத் தயங்கிய தஞ்சை

மன்னர் சரபோசிக் கல்லூரி நண்பர்

இரா.தமிழரசனுக்கு விடுத்த கவிதைக் கடிதம்

( 1963 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

=================================================

 

புரட்சிக்           கவியே !          பொன்மணியே !

                 பொலிவுறு          விளக்கே !        தமிழரசே !

திரட்சிக்          கனியே !          தமிழ்த்தேனே !

                 தென்னவர்          கோவே !         தேன்மதியே !

மருட்சி           கொளாதே !      மயங்காதே !

                 மகிழ்ச்சி            யுடன்நீ           கவிபாடு !

தருணம்          காலம்            பாராதே !

                 தமிழ்த்              தூதாற்று !        தாய்போற்று !

 

==================================================

 

--------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 16]

 {30-03-2022}

 

-------------------------------------------------------------------------------------

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (03) (1963) காவிய மலருட் புகுந்தினிமை !

=================================================

அரியலூர்  மாவட்டம் புங்கங்குழி  ஒட்டக்கோயிலைச் 

சேர்ந்த

கல்லூரி நண்பர் தியாகராஜனின் நெட்டெழுத்து ஏட்டில் 

(AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த 

ஒரு கவிதை

(1963 – ஆம் ஆண்டு எழுதிய கவிதை))

==================================================

                     

காவிய      மலருட்      புகுந்தினிமைக்

…….கருத்துக்        குவியல்      தேனெடுத்து,

மேவிய     நும்முளத்    தேனீக்கள்

…….மெழுகுக்        குடிலாம்      நுமதுடலில் ,

கோவிய    லன்னக்      காத்துவரின்

…….குழுமிய         பயன்தான்    என்னென்கொல் !

ஓவிய       உருவோய் !  என்னண்ப !

…….உதவுக          தேனை        உலகிற்கே !

 

=================================================

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

------------------------------------------------------------------------------------

 

பாடல் (02) (1962) சேர்ந்திடுவீர் நம்நாட்டின் பிற்கால மன்னர்காள் !

-----------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துச் சிந்தனை !

(1962 – ஆம் ஆண்டு எழுதிய வெண்பா !)

------------------------------------------------------------------------------------

 

சேர்ந்திடுவீர்      நம்நாட்டின்    பிற்கால   மன்னர்காள் !

சோர்ந்திருக்கும்  நெஞ்சமும்     சுகமடைய,  -  தார்மாலை

வெற்றிகாண்     திண்டோள்     பெருவீரர்    சம்பத்தும்

தோற்றியதோர்   நற்கட்          சியில் !

 

----------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

 ---------------------------------------------------------------------------------

 

பாடல் (01) (1962) தித்திக்கும் தெள்ளமுதே ! தேனிலவே !

==================================================

ஆம்பலாப்பட்டு ஊரினரும் காற்பந்து விளையாட்டு வீரரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கல்லூரி நண்பர் வைரக்கண்ணுவின் நெட்டெழுத்து ஏட்டில் (AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த ஒரு கவிதை

(1962 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

==================================================

 

தித்திக்கும்     தெள்ளமுதே !    தேனிலவே !   பூஞ்சுனையே !

 

முத்தொக்கும்  கண்ணே !        வைரமே !     மும்மணியே !

 

எத்திக்கும்      புகழ்மணக்கக்     காற்பந்து      ஆடுவையே !

 

வித்தொக்கும்   நும்திறனைத்      தமிழுக்கே     ஈகுவையே !

 

=================================================

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[தி.ஆ: 2053,மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

==================================================